நகைக்கடை ஊழியரிடம் ரூ.6 லட்சம் துணிகர கொள்ளை


நகைக்கடை ஊழியரிடம் ரூ.6 லட்சம் துணிகர கொள்ளை
x

விஜயநகரில் நகைக்கடை ஊழியரிடம் ரூ.6 லட்சம் துணிகர கொள்ளை நடந்துள்ளது.

பெங்களூரு:

விஜயநகர் மாவட்டம் அகரிபொம்மனஹள்ளி தாலுகா அன்வேரி கிராமத்தில் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு ஊழியராக சந்தோஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று நகைக்கடையில் வசூலான ரூ.6 லட்சத்தை அருகில் உள்ள வங்கியில் டெபாசிட் செய்ய ஒரு பையில் வைத்து நடந்து சென்றார். அப்போது அவரை மர்மநபர்கள் வழிமறித்து முகத்தில் மிளகாய் பொடியை தூவினர். இதனால் சந்தோஷ், கண் எரிச்சலால் அவதிப்பட்டார். அப்போது மர்மநபர்கள் சந்தோசிடம் இருந்து ரூ.6 லட்சம் வைத்திருந்த பையை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

இதுபற்றி சந்தோஷ் அகரிபொம்மனஹள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story