தினசரி பாதிப்பு சற்றே அதிகரிப்பு - புதிதாக 2,109 பேருக்கு கொரோனா


தினசரி பாதிப்பு சற்றே அதிகரிப்பு - புதிதாக 2,109 பேருக்கு கொரோனா
x

கோப்புப்படம்

நாட்டில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து இறங்கு முகத்தில் சென்ற கொரோனா பாதிப்பில் நேற்று சற்றே ஏற்றம் காணப்பட்டது.

புதுடெல்லி,

நாட்டில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து இறங்கு முகத்தில் சென்ற கொரோனா பாதிப்பில் நேற்று சற்றே ஏற்றம் காணப்பட்டது. நேற்று முன்தினம் 1,331 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று புதிதாக 2,109 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 74 ஆயிரத்து 909 ஆக அதிகரித்துள்ளது.

நாடெங்கும் நேற்று முன்தினம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 454 மாதிரிகளைப் பரிசோதித்ததில் தினசரி பாதிப்பு விகிதம் 1.32 சதவீதமாக பதிவானது.

தொற்றில் இருந்து நேற்று ஒரு நாளில் 3,430 பேர் மீண்டனர். இதுவரையில் மொத்தம் 4 கோடியே 44 லட்சத்து 21 ஆயிரத்து 781 பேர் மீண்டுள்ளனர். கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 1,336 குறைந்தது. இதனால் நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 21 ஆயிரத்து 406 ஆக இருந்தது

கொரோனா தொற்றில் இருந்து மீள வழியின்றி நேற்று முன்தினம் 15 பேர் இறந்தனர். நேற்று 14 பேர் இறந்தனர். இதில் கேரளாவில் விடுபட்ட கொரோனா பலிகளில் 6-ஐ கணக்கில் சேர்த்ததும் அடங்கும். இதுவரை நாட்டில் கொரோனா தொற்றால் இறந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 722 ஆக உயர்ந்தது.

1 More update

Next Story