மோட்டார் சைக்கிளில் பதுங்கி இருந்த பாம்பு பிடிபட்டது


மோட்டார் சைக்கிளில் பதுங்கி இருந்த பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 21 March 2023 11:00 AM IST (Updated: 21 March 2023 11:00 AM IST)
t-max-icont-min-icon

சிவமொக்கா டவுனில் மோட்டார் சைக்கிளில் பதுங்கி இருந்த பாம்பு பிடிபட்டது.

சிவமொக்கா-

சிவமொக்கா டவுன் பகுதியில் ஒரு ஓட்டல் முன்பு மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த மோட்டார் சைக்கிளின் முகப்பு விளக்கின் கீழ் பகுதியில் பாம்பு ஒன்று தலையைநீட்டிக் கொண்டு இருந்தது. இதனை அந்த வழியாக சென்ற மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பாம்பு பிடி வீரர் கிரணுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு அவர் வந்தார். பின்னர் கிரண் மோட்டார் சைக்கிளில் பதுங்கி இருந்த பாம்பை பிடிக்க முயன்றார். ஆனால் பாம்பு பிடிபடவில்லை.

இதையடுத்து முகப்பு விளக்கில் பதுங்கி இருந்த பாம்பை கிரண் லாவகமாக பிடித்தார். பின்னர் அந்த பாம்பை வனப்பகுதியில் விட்டார். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பாம்பு மோட்டார் சைக்கிளில் பதுங்கி இருந்ததை அப்பகுதியில் இருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story