பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர் கைது
விடுதியில் புகுந்து பெண்கள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரது செல்போனில் 7 பெண்களின் வீடியோ இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மகாதேவபுரா:-
தனியார் நிறுவனம்
பெங்களூரு மகாதேவபுரா பகுதியில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக் என்பவர் வேலை செய்து வந்தார். இதற்காக அவர் அந்த பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்தார். இவரது விடுதிக்கு அருகே பெண்கள் விடுதி ஒன்று உள்ளது. இந்த நிலையில் பெண்கள் விடுதியின் குளியல் அறை வழியாக செல்போனில் அசோக் வீடியோ எடுத்தார். அப்போது அங்கு குளித்துக்கொண்டிருந்த பெண் ஒருவர் அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் தனது தோழிகளை அழைத்தார். மேலும் கத்தி கூச்சலிட்டார். உடனே அசோக் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அப்போது விடுதியில் இருந்தவர்கள் அசோக்கை சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அவர்கள் மகாதேவபுரா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் அசோக்கை பிடித்து விசாரணை நடத்தினர்.
செல்போனில்...
அப்போது அவர் தனது செல்போனில் பெண்கள் குளிப்பதை பல மாதங்களாக வீடியோ எடுத்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அசோக்கின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் 7 இளம்பெண்களின் வீடியோ இருந்தது தெரிந்தது. அந்த செல்போனை தடயவியல் ஆய்வகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர் அசோக்கை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.