கணவர் வீட்டில் பெண் மர்மசாவு


கணவர் வீட்டில் பெண் மர்மசாவு
x
தினத்தந்தி 7 Dec 2022 12:15 AM IST (Updated: 7 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு அருகே கணவர் வீட்டில் பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

ஒசக்கோட்டை:

பெங்களூரு புறநகர் ஒசகோட்டை தாலுகா அரசனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 32). மர ஆசாரி ஆவார். இவரும் தீபா என்ற பெண்ணும் காதலித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பிறகு கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தீபாவின் நடத்தையில் சந்தேகப்பட்டும், வரதட்சணை வாங்கி வரும்படியும் அவரை மோகன் அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவரிடம் கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற தீபா, மீண்டும் திரும்பி கணவர் வீட்டுக்கு வந்தார்.

இந்த நிலையில், நேற்று வீட்டில் தீபா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து சுலிபெலே போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, தீபாவின் பெற்றோர், மோகன் தான் தங்கள் மகளை கொன்றுவிட்டதாக புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து சுலிபெலே போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story