ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்ற பெண்


ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்ற பெண்
x

ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெண் பெற்றெடுத்து உள்ளார்.

பெங்களூரு: உத்தர கன்னடா மாவட்டம் அங்கோலா பகுதியை சேர்ந்தவர் சுனிதா (வயது 27). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு திருமணம் ஆனது. கர்ப்பமாக இருந்த சுனிதா, அங்குள்ள ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்து வந்தார். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சுனிதாவுக்கு நேற்று திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து அவரை உறவினர்கள் உடுப்பியில் உள்ள அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் பிரசவம் பார்த்தனர். அப்போது அவருக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன. தாயும், சேய்களும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

1 More update

Next Story