ஆட்டோவில் சென்ற இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.! அதிர்ச்சி சம்பவம்


ஆட்டோவில் சென்ற இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.! அதிர்ச்சி சம்பவம்
x

கோப்புப்படம் 

ஆட்டோவில் சென்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரிதாபாத்,

அரியானா மாநிலம் பரிதாபாத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் 24 வயது பெண் ஒருவர் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஞாயிறன்று இரவு 10 மணியளவில் டவுன் பார்க் அருகே தனது வீட்டிற்கு அந்த பெண் ஆட்டோவில் சென்றார்.

அப்பெண் ஆட்டோவில் ஏறியபோது வேறு பயணிகள் யாரும் இல்லை. ஆனால் சிறிது நேரம் கழித்து இரண்டு ஆண்கள் ஆட்டோவில் ஏறினர். அப்போது ஆட்டோ டிரைவர் உட்பட 3 பேரும் பாதையை மாற்றி அப்பெண்ணை புதர் பகுதிக்கு அழைத்துச்சென்றனர்.

தொடர்ந்து, அவர்களில் இருவர் அப்பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் ஆட்டோ டிரைவரும் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்வதற்காக முயன்றபோது அவர்களின் பிடியில் இருந்து தப்பித்த அப்பெண் முக்கிய சாலையை அடைந்தார்.

அங்கு அப்பெண் அபாய குரல் எழுப்பவே, அவ்வழியாக வந்த நபர் ஒருவரின் உதவியால் காவல் நிலையம் சென்று நடந்ததை போலீசாரிடம் தெரிவித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், குற்றவாளிகளான சனோஜ் மற்றும் விஷ்ணு ஆகிய இருவரை கைதுசெய்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்திவரும் போலீசார், தலைமறைவாகியுள்ள ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.


Next Story