பாலத்தை கடக்க முயன்ற இளைஞரை கண்ணிமைக்கும் நேரத்தில் அடித்து சென்ற காட்டாற்று வெள்ளம் - வீடியோ


பாலத்தை கடக்க முயன்ற இளைஞரை கண்ணிமைக்கும் நேரத்தில் அடித்து சென்ற காட்டாற்று வெள்ளம் - வீடியோ
x
தினத்தந்தி 18 Sept 2022 9:18 PM IST (Updated: 18 Sept 2022 9:26 PM IST)
t-max-icont-min-icon

கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மலைப்பாங்கான பகுதிகளில் ஆங்காங்கே காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அம்மாநிலத்தின் நைனிதால் மாவட்டம் பதாபூர் பகுதியில் கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காட்டாற்று வெள்ளம் அப்பகுதியில் உள்ள ஒரு தரைப்பாலத்தை தாண்டி சென்றுள்ளது.

அப்போது, காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடும் அந்த தரைப்பாலத்தை இளைஞர் ஒருவர் இன்று கடந்து செல்ல முயற்சித்துள்ளார். ஆனால், வெள்ள நீரின் ஓட்டம் அதிமாக இருந்ததால் பாலத்தை கடக்க முயன்றபோது அந்த இளைஞர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், மீட்புக்குழுவினர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு வெகுநேரம் ஆன நிலையில் அந்த இளைஞர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.




Next Story