தன் வீட்டிற்கு தானே தீ வைத்த இளைஞர் - தலைக்கேறிய போதையில் பயங்கர செயல்


தன் வீட்டிற்கு தானே தீ வைத்த இளைஞர் - தலைக்கேறிய போதையில் பயங்கர செயல்
x

திருவனந்தபுரம் அருகே மது போதையில் இருந்த இளைஞர், தனது வீட்டுக்கு தானே தீ வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே மது போதையில் இருந்த இளைஞர், தனது வீட்டுக்கு தானே தீ வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கேரள மாநிலம் வர்க்கலா பகுதியைச் சேர்ந்த கோபகுமார் என்ற இளைஞர், குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால், அவரது குடும்பத்தாருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது வீட்டிற்கு தானே தீ வைத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை போராடி அணைத்த நிலையில், வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன.

இதனிடையே வீட்டிற்கு தீ வைத்த கோபகுமாரை போலீசார் கைது செய்தனர்.



Next Story