வைரலாகும் இளம் பெண்ணின் சைக்கிள் நடன வீடியோ
சைக்கிள் ஓட்டிக்கொண்டே நடனமாடும் பெண் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி உள்ளது
இன்ஸ்டாகிராமில் பலவகைகளில் நடனமாடும் திறமையானவர்கள் உள்ளனர், இருப்பினும், சைக்கிள் ஓட்டும்போது யாராவது சைக்கிளில் பாடல்களுடன் நடனமாடுவதைப் பார்த்திருக்கிறீர்களா?
புஷ்ரா என்ற பெண்மணி, ஒரே நேரத்தில் சைக்கிள் ஓட்டிக்கொண்டு நடனமாடும் வீடியோ நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் iamsecretgirl023 இல் 7.45 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார் . அவர் சைக்கிள் ஓட்டும்போது நடனமாடும் பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார். சுதந்திர தினத்தன்று அவர் தேசியக் கொடியை அசைத்து நடனமாடும் வீடியோவும் அதில் உள்ளது.
பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு சாலையில் சைக்கிள் ஓட்டும்போது வளைந்து நெளிந்து நடனமாடுகிறார். கைப்பிடியை கூட பிடிக்காமல், இரு கைகளையும் பயன்படுத்தி சைக்கிளை பேலன்ஸ் செய்து வருகிறார்.இவரின் திறமையை நெட்டிசன்கள் பாராட்டினாலும், பேலன்ஸ் தவறினால் காயம் ஏற்படும் அபாயம் உள்ளதால் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு பலரும் அறிவுறுத்தியுள்ளனர்.