அரசாங்க மானியங்கள் மற்றும் சலுகைகளைப் பெற இனி ஆதார் கட்டாயம்- யுஐடிஏஐ


அரசாங்க மானியங்கள் மற்றும் சலுகைகளைப் பெற இனி ஆதார் கட்டாயம்- யுஐடிஏஐ
x

Image courtesy: PTI 

அரசின் மானியங்கள், சேவைகளைப் பெற ஆதார் எண்ணை யுஐடிஏஐ கட்டாயமாக்கியுள்ளது.

புதுடெல்லி,

அரசாங்க மானியங்கள் மற்றும் சலுகைகளைப் பெற இனி ஆதார் எண் அல்லது பதிவுச் சீட்டை நீங்கள் வைத்திருக்க வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அரசு வழங்கும் மானியங்கள் மற்றும் சலுகைகளைப் பெறுபவர்களுக்கு ஆதார் விதிகளை கடுமையாக்கும் வகையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நிரந்தர ஆதார் வரும்வரை, அந்த நபருக்கு ஆதார் பதிவு அடையாள எண் ஒதுக்கப்படும், அந்த ஸ்லிப்புடன் மாற்று அடையாள அட்டையைப் பயன்படுத்தி அவர் அரசின் பலன்கள், மானியங்கள் மற்றும் சேவைகளைப் பெறலாம்,' என்று யுஐடிஏஐ தெரிவித்துள்ளது.

ஆதார் எடுக்காத நபர்கள் அதற்கு பதில் அரசின் மற்ற அடையாள அட்டைகளை சமர்ப்பிக்க ஆதார் சட்டத்தின் 7வது பிரிவின் கீழ் அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. அதன்மூலம் அவர், அரசின் நன்மைகள், மானியங்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று இருந்தது.

ஆனால் தற்போது இதில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இனி சலுகைகளை பெற கட்டாயம் ஆதார் அட்டையை பயன்படுத்த வேண்டும். அப்படி ஆதார் அட்டை வழங்கப்படாத பட்சத்தில், ஆதார் அட்டைக்கு பதிவு செய்து அந்த எண்ணைப் பயன்படுத்தவேண்டும் என்று அறிவித்துள்ளது.


Next Story