எம்.எல்.ஏ சட்டையை பிடித்து தரதரவென இழுத்து சென்ற கட்சியினர்...! அதிர்ச்சியில் ஆம் ஆத்மி


எம்.எல்.ஏ சட்டையை பிடித்து தரதரவென இழுத்து சென்ற கட்சியினர்...! அதிர்ச்சியில் ஆம் ஆத்மி
x

டெல்லியில் மத்தியாலா தொகுதி ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. குலாப் சிங் யாதவ் அவரது கட்சிக்காரர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

புதுடெல்லி

டெல்லியில் உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் பணத்திற்காக உள்ளாட்சி இடங்களை ஆம் ஆத்மி விற்பனை செய்வதாக பாஜக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

இது குறித்து பாஜக தேசிய செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான சம்பித் பத்ரா இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை பகிர்ந்து உள்ளார். வீடியோவில், டெல்லி 'மத்தியாலா' தொகுதி எம்.எல்.ஏ 'குலாப் சிங் யாதவ்' மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து 'ஆம் ஆத்மி' கட்சியினர் கூறுகையில், "எம்.எல்.ஏ. யாதவ் இரவு 8 மணியளவில் ஷியாம் விஹாரில் கட்சித் தொண்டர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தி கொண்டிருந்தார். இந்த கூட்டத்தில் ஒரு பிரச்சினை தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டது.

இந்த சலசலப்பு கடும் விவாதமாக உருவெடுத்தது. பின்னர் கை கலப்பில் முடிந்தது. பலர் எம்எல்ஏவை கடுமையாக தாக்கினர். அவரது சட்டை காலரை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றனர். அவர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினர். ஒரு கட்டத்தில் அவர் உயிருக்கு பயந்து ஓடத்தொடங்கினார். ஆனால் எதனால் இந்த பிரச்சனை வெடித்தது என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.
Next Story