டெல்லி துணைநிலை கவர்னருக்கு எதிராக சட்டசபையில் இரவு முழுவதும் போராட்டம் நடத்த ஆம்ஆத்மி எம்.எல்.ஏக்கள் முடிவு


டெல்லி துணைநிலை கவர்னருக்கு எதிராக சட்டசபையில் இரவு முழுவதும் போராட்டம் நடத்த ஆம்ஆத்மி எம்.எல்.ஏக்கள் முடிவு
x

டெல்லி துணை நிலை கவர்னருக்கு எதிராக சட்டசபையில் இரவு முழுவதும் போராட்டம் நடத்த ஆம்ஆத்மி எம்.எல்.ஏக்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

டெல்லி துணை நிலை கவர்னர் சக்சேனா, கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2022 ம் ஆண்டு வரை காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத்தின் தலைவராக பதவி வகித்தார்.

இந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு சுமார் ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்றுமாறு தனது ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுத்தாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ துர்கேஷ் பதக் சட்டசபையில் குற்றம் சுமத்தினார்.

மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

இந்த நிலையில், டெல்லி துணை நிலை கவர்னர் சக்சேனா மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தக்கோரி, ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் போராட்டம் நடத்த உள்ளனர். டெல்லி சட்டசபையில் இன்று இரவு முழுவதும் தங்கி போராட்டம் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story