கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய அப்துல் நாசர் மதானிக்கு மூச்சு திணறல்-ஆஸ்பத்திரியில் அனுமதி
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர் அப்துல் நாசர் மதானி. இவர் மீதான வழக்கு விசாரணைகள் முடிந்து குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோவை,
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர் அப்துல் நாசர் மதானி. இவர் மீதான வழக்கு விசாரணைகள் முடிந்து குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அப்துல் நாசர் மதானி, சுப்ரீம் கோர்ட்டை அணுகி தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் தனது இறுதி காலத்தை தனது சொந்த ஊரில் கழிக்க ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அப்துல் நாசர் மதனிக்கு பல்வேறு நிபந்தனைகளை தளர்த்தியும், புதிய சில நிபந்தனைகளுடன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, அப்துல் நாசர் மதானி கொல்லம் வந்து சாஸ்தான்கோட்டையில் தனது வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு இன்று மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.