80 சதவீத ரெயில் டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு - மத்திய மந்திரி அஸ்விணி வைஷ்ணவ் தகவல்
ரெயில் டிக்கெட்டுகள் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்விணி வைஷ்ணவ் மக்களவையில் நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
புதுடெல்லி,
ரெயில் டிக்கெட்டுகள் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்விணி வைஷ்ணவ் மக்களவையில் நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், "ரெயில்வே சேவைகள் மற்றும் தரவுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
டிஜிட்டல் முன்னெடுப்புக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு ஊடகங்கள் மூலம் ஊரக மற்றும் கிராமப்புறங்களில் வழக்கமான முகாம்கள் நடத்தப்படுகிறது. ரெயில் பயணச்சீட்டுகளில் சுமார் 80 சதவீதம் இணையதளம் வாயிலாக பதிவு செய்யப்படுகிறது.
முன்பதிவு மற்றும் முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டுகளை பெறுவதற்கு பல்வேறு தளங்களில் மொபைல் செயலிகள் உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story