வளர்ச்சி பணிகளில் முறைகேடு; என்ஜினீயர் பணி இடைநீக்கம்


வளர்ச்சி பணிகளில் முறைகேடு; என்ஜினீயர் பணி இடைநீக்கம்
x

வளர்ச்சி பணிகளில் முறைகேடு செய்ததாக என்ஜினீயரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

சிக்கமகளூரு;

சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகாவை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவர் அந்த பகுதியில் உள்ள மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் என்ஜினீயராக பணி செய்து வந்தார். இந்த நிலையில் சிக்கமகளூரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளங்களை தூர்வருவதற்கும், மரக்கன்றுகள் நடுவதற்கும் பஞ்சாயத்து சார்பில் நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில் வளர்ச்சி பணிகள் நிறைவடைந்தது குறித்து மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி பிரபு மற்றும் நயனா ஆகியோர் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறாமல், அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி கையாடல் செய்யப்பட்டது தெரியவந்தது.

மேலும், அந்த பகுதிகளில் உள்ள குளத்தின் கரைகளில் மரக்கன்றுகள் நடுவதிலும் முறைகேடு நடைபெற்றுள்ளது. முறையாக பணிகள் நடைபெறாமல் பொய்கணக்கு காண்பித்து பஞ்சாயத்து சார்பில் ஒதுக்கப்பட்ட நிதியை கையாடல் செய்ததாக கூறி மஞ்சுநாத்தை பணி இடைநீக்கம் செய்து முதன்ைம செயல் அதிகாரி உத்தரவிட்டார்.

மேலும் அவர் மீது உரிய விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.

1 More update

Next Story