தேர்தல் அதிகாரிகளுக்கு கணக்கு ஒப்படைக்க வேண்டும்


தேர்தல் அதிகாரிகளுக்கு கணக்கு ஒப்படைக்க வேண்டும்
x

பத்திரிக்கைகள், சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்தால், தேர்தல் அதிகாரிகளுக்கு கணக்கு ஒப்படைக்கவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் வெங்கடராஜா உத்தரவிட்டுள்ளார்.

கோலார் தங்கவயல்:-

செலவின கணக்குகள்....

கோலார் மாவட்ட அலுவலகத்தில் கலெக்டர் வெங்கடராஜா தலைமையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இது குறித்து கலெக்டர் வெங்கடராஜா கலந்து கொண்டு, தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் எடுத்து கூறினார். அப்போது கலெக்டர் வெங்கடராஜா பேசியதாவது:-

கர்நாடக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளது. இந்த நேரத்தில் வேட்பாளர்கள் ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில், விளம்பரம் கொடுத்தால், அதற்கான செலவின கணக்குகளை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கவேண்டும். இதை மீறி யாரேனும் விளம்பரம் செய்தால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

நடவடிக்கை எடுக்கவேண்டும்

அதேபோல சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படும் பணம், பரிசு பொருட்கள் மீது அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளவேண்டும். ஆவணம் இல்லாமல் ஏதேனும் பொருட்கள் எடுத்து சென்றால், அதை பறிமுதல் செய்யவேண்டும். அரசு அனுமதியில்லாமல் எந்த நிகழ்ச்சியும் நடத்த கூடாது. கோவில் திருவிழா என்ற பெயரில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதில் எந்த அரசு அதிகாரியும் அலட்சியமாக நடந்து கொள்ள கூடாது. அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story