பாஜகவுக்கு எதிராக செயல்பட்டால் ரெய்டு தான் நடக்கும் - தேஜஸ்வி யாதவ் விமர்சனம்
பாஜகவுக்கு எதிராக செயல்பட்டால் ரெய்டு தான் நடக்கும் என்று பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
பாட்னா,
லாலு பிரசாத் மனைவி ராப்ரி தேவியிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இதுகுறித்து பிகாரின் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் கூறுகையில்,
பாஜகவுடன் இருந்தால், நீங்கள் ராஜா ஹரிச்சந்திராதான். ஆனால், பாஜகவுக்கு எதிராக செயல்பட்டால் ரெய்டு நடக்கும். மராட்டியத்தில் சரத் பவாரின் மருமகன் அஜித் பவார் பாஜகவுக்குச் சென்றார். அவர் மீது அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டன. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முகுல் ராய், பாஜகவுக்கு வந்தபோது, அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டன.
ஆனால், நீங்கள் பாஜகவின் முகத்திரையை வெளிக்கொண்டு வந்தால் ரெய்டுதான் நடக்கும். பிகாரில் புதிய அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த நாளில், இது நாடாகும் என்று கூறினேன். வருகிற மார்ச் 15 ஆம் தேதி ஜாமீன் மனு மீதான விசாரணை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.