மந்திரி சோமண்ணா மீது நடவடிக்கை?


மந்திரி சோமண்ணா மீது நடவடிக்கை?
x

வேட்பு மனுவை திரும்ப பெற கூறும் ஆடியோ விவகாரம் மந்திரி சோமண்ணா மீது என்ன நடவடிக்கைக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரிகள் பதில் அளிக்கவேண்டும்.

பெங்களூரு:-

கர்நாடக சட்டசபை தேர்தலில் சாம்ராஜ்நகர் மற்றும் வருணா தொகுதிகளில் மந்திரி சோமண்ணா போட்டியிடுகிறார். இதற்கிடையில், சாம்ராஜ்நகர் தொகுதியில் ஜனதாதளம் (எஸ்) வேட்பாளர் மல்லிகார்ஜுனசாமியிடம், வேட்பு மனுவை திரும்ப பெற சொல்வது, இதற்காக கார் உள்ளிட்டவை தருவதாக ஆசை வார்த்தைகளை கூறுவது என மந்திரி சோமண்ணா பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த ஆடியோவில் பேசியது நான் இல்லை என்று மந்திரி சோமண்ணாவும் மறுத்துள்ளார். இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ்குமார் மீனா நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜனதாதளம் (எஸ்) வேட்பாளரின் வேட்பு மனுவை திரும்ப பெறும்படி, சோமண்ணா பேசியதாக கூறி ஒரு ஆடியோ இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலனை நடத்தி வருகிறது. இதுபற்றி சம்பந்தப்பட்ட ஜனதாதளம் (எஸ்) கட்சி வேட்பாளரிடம் இருந்து தேர்தல் ஆணையத்திற்கு எந்த விதமான புகாரும் வரவில்லை. இந்த ஆடியோ விவகாரத்தின் உண்மை தன்மை என்ன என்பதும் தெரியவில்லை. ஒருவேளை ஆடியோ விவகாரம் உண்மையாக இருந்தால், அதற்கான சாட்சி ஆதாரங்கள் கிடைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதுபற்றி ஜனதாதளம் (எஸ்) மற்றும் பா.ஜனதா வேட்பாளரிடம் இருந்து சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் தகவல்களை பெற்றுக் கொள்வார்கள். அதன்பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story