சுகேஷ் சந்திரசேகர் மீதான ரூ.200 கோடி மோசடி வழக்கு நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு ஜாமீன் டெல்லி கோர்ட்டு உத்தரவு


சுகேஷ் சந்திரசேகர் மீதான ரூ.200 கோடி மோசடி வழக்கு நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு ஜாமீன்  டெல்லி கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 16 Nov 2022 12:45 AM IST (Updated: 16 Nov 2022 12:45 AM IST)
t-max-icont-min-icon

மத்திய சட்ட அமைச்சக உயர் அதிகாரி போல் நடித்து ரூ.200 கோடி மிரட்டி பறித்த வழக்கில், மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரை டெல்லி போலீஸ் கைது செய்தது.

புதுடெல்லி,

மத்திய சட்ட அமைச்சக உயர் அதிகாரி போல் நடித்து ரூ.200 கோடி மிரட்டி பறித்த வழக்கில், மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரை டெல்லி போலீஸ் கைது செய்தது. அவரது காதலியும், நடிகையுமான லீனா மரியா பாலையும் கைது செய்தது.

இந்த வழக்கில், இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசையும் போலீசார் சேர்த்தனர். அதனால் அவர் ஜாமீன் கோரி, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனு மீது நவம்பர் 15-ந் தேதி தீர்ப்பு அளிப்பதாகவும், அதுவரை ஜாக்குலினுக்கு இடைக்கால ஜாமீனை நீட்டிப்பதாகவும் கோர்ட்டு கூறியிருந்தது. இந்தநிலையில், ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு ஜாமீன் வழங்கி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டு நீதிபதி சைலேந்திர மாலிக் நேற்று உத்தரவிட்டார்.


Next Story