நடிகை சைத்ரா ரூ.25 கோடி கேட்டு மிரட்டுகிறார்; கணவர் குற்றச்சாட்டு


நடிகை சைத்ரா ரூ.25 கோடி கேட்டு மிரட்டுகிறார்; கணவர் குற்றச்சாட்டு
x

நடிகை சைத்ரா

நடிகை சைத்ரா ரூ.25 கோடி கேட்டு மிரட்டுவதாக அவரது கணவர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

பெங்களூரு:

பிரபல கன்னட நடிகையாக இருப்பவர் சைத்ரா. இவரது கணவர் பாலாஜி போத்ராஜ். தொழில் அதிபர். இந்த நிலையில் கடந்த மாதம் சைத்ரா தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மைசூரு ஜெயலட்சுமிபுரம் போலீசில் புகார் அளித்தார். அதில், எனக்கு தெரியாமல் எனது வங்கி கணக்கை பயன்படுத்தி எனது கணவர் குடும்பத்தினர் ரூ.13 லட்சம் நகைக்கடன் பெற்றுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதுகுறித்து போலீசார் சைத்ராவின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் சைத்ராவின் புகார் குறித்து அவரது கணவர் பாலாஜி போத்ராஜ் கூறுகையில், எனக்கும் சைத்ராவுக்கு திருமணமானது முதல் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. சைத்ராவுக்கு தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தது. ஆனால் நான் அதற்கு மறுத்துவிட்டேன். இதையடுத்து சைத்ரா விவாகரத்து கேட்டு விண்ணப்பித்து இருந்தார். நான் அதற்கு விவாகரத்துடன் ஜீவனாம்சம் வழங்கவும் ஒப்புக்கொண்டேன்.இதுவரை எனது குழந்தைகளில் நலனுக்காக சைத்ராவுக்கு ரூ.1½ கோடி கொடுத்துள்ளேன். ஆனால் அந்த பணம் போதாது என கூறி ரூ.25 கோடி பணம் கேட்டார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். இதையடுத்து சைத்ரா என் மீதும் எனது குடும்பத்தினர் மீதும் பொய் வழக்கு தொடர்ந்து மிரட்டி வருகிறார் என்றார்.


Next Story