ஆதித்யா-எல்1 விண்கலம்: 'கவுண்ட்டவுன்' நாளை தொடக்கம் - இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்
ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருவதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
ஸ்ரீஹரிகோட்டா,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரனை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக 'ஆதித்யா- எல்1' என்ற விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வருகிற 2-ந்தேதி (சனிக்கிழமை) பகல் 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவுகிறது.
இதற்கான 'கவுண்ட்டவுன்' வருகிற 1-ந்தேதி(நாளை) தொடங்க உள்ளதாக் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் தயார் நிலையில் உள்ளது. ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான ஒத்திகையை முடித்துவிட்டோம். நாளை மறுநாள் ராக்கெட் ஏவப்பட இருக்கும் நிலையில், நாளை அதற்கான கவுண்ட்டவுன் தொடங்கப்படும்" என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story