நீதியை நிர்வகிப்பது சவாலானது - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பேச்சு


நீதியை நிர்வகிப்பது சவாலானது - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பேச்சு
x

நீதியை நிர்வகிப்பது சவாலானது என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா பிரிவு உபசார விழாவில் இன்று பேசியுள்ளார்.



புதுடெல்லி,



சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா ஓய்வு பெற உள்ள நிலையில், அவருக்கு டெல்லி ஐகோர்ட்டின் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று பிரிவு உபசார விழா ஒன்று நடத்தப்பட்டது.

இதில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா தனது குடும்பத்துடன் சென்று கலந்து கொண்டார். அவர் விழாவில் பேசும்போது, நீதியை நிர்வகிப்பது என்பது சவாலான ஒன்று.

டெல்லி ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பணியாற்றிய அனுபவம் எனக்கு இந்திய தலைமை நீதிபதியாக பணியாற்ற எண்ணற்ற உதவிகளை செய்துள்ளது.

நான் பணிக்கான பட்டியலை தயார் செய்வது, வழக்கு விவரங்களை பட்டியலிடுவது, ஒதுக்கப்பட்ட வழக்குகள் ஆகியவற்றை பற்றி அறிந்து கொண்டேன். டெல்லி ஐகோர்ட்டில் மேற்கொண்ட இந்த அணுகுமுறை நிறைய எனக்கு உதவி செய்துள்ளது என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, டெல்லி ஐகோர்ட்டுக்கு இதற்கு முன்பும் வந்துள்ளேன். ஆச்சரியப்படும் வகையில் ஒரு நாள் கூட, அன்றைய தினம் அழுத்தம் நிறைந்த ஒன்றாக இருந்ததற்கான அனுபவம் எனக்கு வாய்த்ததில்லை. அந்த நேரத்தில் மூத்த நீதிபதிகளாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என பேசியுள்ளார்.


Next Story