சித்ரதுர்கா முருகா மடத்திற்கு நிர்வாக அதிகாரி நியமனம்?


சித்ரதுர்கா முருகா மடத்திற்கு நிர்வாக அதிகாரி நியமனம்?
x

சித்ரதுர்கா முருகா மடத்திற்கு நிர்வாக அதிகாரியை நியமனம் குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு-

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சித்ரதுர்காவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சித்ரதுர்கா முருகா மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீதான பாலியல் புகார் விவகாரம் கோர்ட்டில் உள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து நான் கருத்து கூற மாட்டேன். கோர்ட்டு முடிவு எடுக்கும். முருகா மடத்திற்கு நிர்வாக அதிகாரியை நியமிக்குமாறு கோரிக்கை வந்துள்ளது. அதை அரசு பரிசீலித்து வருகிறது. நிர்வாக அதிகாரியை நியமிக்கும் முன்பு மேற்கொள்ளப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வருவாய்த்துறையிடம் இருந்து சில ஆவணங்களை கேட்டுள்ளோம். அந்த துறையிடம் இருந்து அறிக்கை வந்ததும் அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும்.

நாங்கள் நடத்தும் ஜனசங்கல்ப யாத்திரை பொதுக்கூட்டத்திற்கு கூட்டம் சேரவில்லை என்று சித்தராமையா கூறுகிறார். அவருக்கு நான் அழைப்பு விடுக்கிறேன், இந்த பொதுக்கூட்டத்திற்கு வந்து மக்களின் கூட்டத்தை பார்க்க வேண்டும். ஊடகங்களில் மக்களின் கூட்டத்தை காட்டுகிறார்கள். அதை அவர் பார்க்க வேண்டும். எங்களின் இந்த ஜனசங்கல்ப யாத்திரை வெற்றி யாத்திரையாக மாறியுள்ளது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Next Story