அ.தி.மு.க. பொதுக்குழு : ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீடு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
இன்று விசாரிக்க இருந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீடு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை நடைபெறுகிறது.
புது டெல்லி,
'அ.தி.மு.க. பொதுக்குழுவை நடத்தலாம். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்ற சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, ஓ.பன்னீர்செல்வம், பி.வைரமுத்து ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 13-ந் தேதி மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை அவசரமாக விசாரிக்க கோரி கடந்த வாரம் முறையிட்ட நிலையில், இவற்றை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இன்று (வியாழக்கிழமை) விசாரிப்பதாக அறிவித்தது. ஆனால் இந்த மனுவை நாளை (ஜூலை 29) விசாரிப்பதாக நேற்று அறிவித்தது.
Related Tags :
Next Story