அ.தி.மு.க. மாநாட்டுக்காக தற்காலிக செல்போன் கோபுரம்: மத்திய மந்திரியிடம் கோரிக்கை
மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டுக்காக தற்காலிக செல்போன் கோபுரம் அமைக்க மத்திய மந்திரியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
புதுடெல்லி,
மதுரையில் வருகிற 20-ந் தேதி அ.தி.மு.க.வின் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனையொட்டி தடையில்லா சேவைக்காக அங்கு தற்காலிக செல்போன் கோபுரம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின் பேரில் மு.தம்பிதுரை எம்.பி. டெல்லியில் நேற்று மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரெயில்வேத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து இது குறித்த கோரிக்கை மனுவை அளித்தார்.
Related Tags :
Next Story