கொச்சி விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் கென்யா பெண் சிக்கினார்

கோப்புப்படம்
கொச்சி விமான நிலையத்தில் கென்யா பெண் பயணியிடம் இருந்து 1 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
கொச்சி,
கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது கென்யா நாட்டின் நைரோபியில் இருந்து வந்த ஒய்விட்டி நகிமனா என்ற பெண் பயணியிடம் சோதனை நடத்தியபோது அவரிடம் மர்ம பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை ஆய்வுக்கு உட்படுத்தியபோது அது ஹெராயின் என்பது அறியப்பட்டது.
இதையடுத்து அவரிடம் இருந்து 1 கிலோ அளவுள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் தீவிர விசாரணை நடப்பதாகவும், விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story