12 ஆண்டுகளுக்கு பின் புதுச்சேரி சட்டசபையில் இன்று முழு பட்ஜெட் தாக்கல்


12 ஆண்டுகளுக்கு பின் புதுச்சேரி சட்டசபையில் இன்று முழு பட்ஜெட் தாக்கல்
x

கோப்புப்படம்

12 ஆண்டுகளுக்கு பின் புதுச்சேரி சட்டசபையில் இன்று முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் அடுத்து வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கத்தில் இருந்து வந்தது. ஆனால் கடந்த 2011-ம் ஆண்டு முதல் இந்த நடைமுறை மாறியது.

மார்ச் மாத இறுதியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அடுத்த ஒரு சில மாதங்களில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இதனால் பட்ஜெட் தொகையை முழுவதுமாக செலவிடுவதில் சிக்கலும் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து மார்ச் மாத இறுதியில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்-அமைச்சர் ரங்கசாமி இந்தமுறை, தான் பதவியேற்ற நாள்முதலே முயற்சி மேற்கொண்டார். அந்த முயற்சி 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் கைகூடி உள்ளது. இதன்படி புதுச்சேரி சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று (திங்கட்கிழமை) காலை 9.45 மணிக்கு 2023-24-ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

பட்ஜெட்டில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story