ஆப்பிள் நிறுவன ஏர்போட்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் - தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
ஐபோன் 14 செல்போன்கள் டிசம்பர் மாதத்திற்குள் சென்னையில் உள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் என்று அறிவித்திருந்தது.
புதுடெல்லி,
உலகின் முன்னணி மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், தனது புதுவரவான ஐபோன்-14 ரக செல்போன்களை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.
ஐபோன் 14 செல்போன்கள் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் சென்னையில் உள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் என்று அறிவித்திருந்தது.
இந்த நிலையில், ஐபோன் 14க்குப் பிறகு, ஆப்பிள் நிறுவன ஏர்போட்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.ஆப்பிளின் வயர்லெஸ் இயர்போன்களான 'ஏர்போட்கள்' அதிக வரவேற்பை பெற்றவை. இந்த தகவலை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிளின் உலகளாவிய கூட்டணி நிறுவனமான பாக்ஸ்கான், சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் ஐபோன் 14 செல்போன்களை தயாரித்து வருகிறது.காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவனம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.