தமிழக அரசின் தடையை பாதிக்காமல் 28% ஜிஎஸ்டி வரி - நிர்மலா சீதாராமன் பேட்டி


தமிழக அரசின் தடையை பாதிக்காமல் 28% ஜிஎஸ்டி வரி - நிர்மலா சீதாராமன் பேட்டி
x

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழக அரசின் தடையை பாதிக்காத வகையில் 28% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் நடைபெற்ற 51வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு, மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

கேசினோக்கள், குதிரைப் பந்தயம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி விதிப்பு செயல்படுத்தப்படும் நடவடிக்கையை 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மறுஆய்வு செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் தெரிவித்துள்ளது. ஆறு மாதங்கள் என்று சொல்கிறேன் என்றால் இன்றிலிருந்து தொடங்குவது என்பதல்ல, அது நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு தான் தொடங்கும். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழக அரசின் தடையை பாதிக்காத வகையில் 28% ஜிஎஸ்டி விதிக்கப்படும்.

சூதாட்ட விடுதிகள் அதிகம் உள்ள கோவா, சிக்கிம் ஆகிய மாநிலங்கள் கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தங்கள் மாநில நலனுக்கு இது புறம்பானதாக உணர்ந்தனர். இருப்பினும் அவர்கள் 28% வரி விதிப்பை ஏற்றுக்கொண்டனர் என்றார்.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரியை 18% இருந்து 28%ஆக உயர்த்த 50வது ஜிஎஸ்டி கவுன்சிலில் திட்டமிடப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவிற்கு இணைய விளையாட்டு வீரர்கள் நல வாரியம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story