அக்னிபத் திட்டம்: 3 நாட்களில் 56,960 பேர் விண்ணப்பம் - இந்திய விமானப்படை தகவல்


அக்னிபத் திட்டம்: 3 நாட்களில் 56,960 பேர் விண்ணப்பம் - இந்திய விமானப்படை தகவல்
x

அக்னிபத் திட்டத்தில் சேர கடந்த 3 நாட்களில் 56,960 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

முப்படையில் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் 'அக்னிபத்' திட்டத்தை மத்திய அரசு கடந்த 14-ந்தேதி அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் இளைஞர்களை சேர்க்கும் பணிகளில் முப்படைகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

அந்த வகையில் அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த 24-ந்தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த 3 நாட்களில் மொத்தம் 56,960 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்த தகவல் இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 5-ந்தேதி கடைசி நாளாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப் படையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://careerindianairforce.cdac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களைளுக்கு ஆன்லைன் தேர்வு வரும் ஜூலை 24ஆம் தேதி நடத்தப்படும் என்றும் இந்திய விமானப் படை அறிவித்துள்ளது.

56960 !
That's the total number of applications received till date from future
#Agniveers in response to the #Agnipath recruitment application process on https://t.co/kVQxOwkUcz

Registration closes on 05 July 2022.

Details about the process available on the website. pic.twitter.com/fkq4HQ3cbx

— Indian Air Force (@IAF_MCC) June 26, 2022 ">Also Read:



Next Story