'அக்னிபத்' திட்ட எதிர்ப்பு போராட்டங்களால் 2,132 ரெயில்கள் ரத்து


அக்னிபத் திட்ட எதிர்ப்பு போராட்டங்களால் 2,132 ரெயில்கள் ரத்து
x

Image Courtacy: ANI

‘அக்னிபத்’ திட்ட எதிர்ப்பு போராட்டங்களால் 2,132 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.

புதுடெல்லி,

முப்படைகளுக்கு 4 ஆண்டுகால ஒப்பந்த முறையில் ஆள் எடுப்பதற்கான 'அக்னிபத்' திட்டத்தை எதிர்த்து வடமாநிலங்களில் தீவிர போராட்டங்கள் நடந்தன. ரெயில்வே சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.

இதுகுறித்து நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது, ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:- 'அக்னிபத்' திட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களால், கடந்த மாதம் 15-ந் தேதியில் இருந்து 23-ந் தேதி வரை 2 ஆயிரத்து 132 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. பயணிகளுக்கு ரூ.102 கோடியே 96 லட்சம் திருப்பித்தரப்பட்டது. ரெயில்வே சொத்துகள் சேதப்படுத்தப்பட்டதால், ரூ.259 கோடியே 44 லட்சம் இழப்பு ஏற்பட்டது என்று அவர் கூறினார்.


Next Story