அமிர்தசரஸ்-இங்கிலாந்து இடையே நேரடி விமான சேவையை தொடங்கியுள்ளது ஏர் இந்தியா
ஏர் இந்தியா நேற்று அமிர்தசரசில் இருந்து இங்கிலாந்தில் உள்ள கேட்விக் வரை நேரடி விமானத்தை தொடங்கியுள்ளது.
புது டெல்லி,
ஏர் இந்தியா நேற்று அமிர்தசரசில் இருந்து இங்கிலாந்தில் உள்ள கேட்விக் வரை நேரடி விமானத்தை தொடங்கியுள்ளது.
மொத்தமாக, விமான நிறுவனம் தற்போது இங்கிலாந்தில் வாரத்திற்கு 49 விமானங்களை இயக்குகிறது. லண்டனுக்கு (ஹீத்ரோ மற்றும் கேட்விக்) 43 விமானங்களும், பர்மிங்காமிற்கு ஆறு விமானங்களும். டெல்லி மற்றும் மும்பையிலிருந்து ஹீத்ரோ, லண்டனுக்கு 31 வாராந்திர விமானங்களை இயக்குகிறது.
கேட்விக் விமான நிலையம் இங்கிலாந்தின் இரண்டாவது பெரிய விமான நிலையமாகும். அமிர்தசரஸில் இருந்து கேட்விக் செல்லும் ஏர் இந்தியா விமானத்தை மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கிவைத்தார்.
புதிய சர்வதேச விமான போக்குவரத்து நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானது என்றும், பஞ்சாபிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் இங்கிலாந்தில் வசிப்பதாகவும், புதிய சேவை இரண்டு வெவ்வேறு நாடுகளில் வாழும் குடும்பங்களை இணைக்கும் என்றும் அவர் கூறினார்.