ஒரே ஆட்சி காலத்தில் 3 விதமான கூட்டணியில் துணை முதல்-மந்திரியான அஜித்பவார்


ஒரே ஆட்சி காலத்தில் 3 விதமான கூட்டணியில் துணை முதல்-மந்திரியான அஜித்பவார்
x

ஏக்நாத் ஷிண்டே-பா.ஜனதா ஆட்சிக்கு ஆதரவு கொடுத்து ஒரே ஆட்சி காலத்தில் வெவ்வேறு கூட்டணியில் 3-வது முறையாக துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்று உள்ளார்.

மராட்டிய மாநிலத்தில் தேசிய வாத காங்கிரஸ் கட்சி உடைந்துள்ளது. 30 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் அஜித் பவார் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார்.அஜித்பவார் துணை முதல்வராக பொறுப்பெற்றுள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் 3-வது முறையாக அஜித் பவார் பதவியேற்றுள்ளார். அது குறித்த விவரம் வருமாறு:

2019-ம் ஆண்டு மகாவிகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி அமைவதில் இழுபறி ஏற்பட்டு வந்தநிலையில், அஜித்பவார் நவம்பர் 23-ந் தேதி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜனதா ஆட்சிக்கு ஆதரவு அளித்து துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.

ஆனால் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கிடைக்காததால் அந்த ஆட்சி 80 மணி நேரத்தில் கவிழ்ந்தது. அதன்பிறகு அஜித்பவார் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் சேர்ந்து அமைந்த மகாவிகாஸ் கூட்டணி ஆட்சியிலும் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.

கடந்த ஆண்டு ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவை உடைத்ததால் மகாவிகாஸ் அகாடி ஆட்சி கவிழ்ந்து எதிர்க்கட்சி தலைவரானார். இந்தநிலையில் இன்று ஏக்நாத் ஷிண்டே-பா.ஜனதா ஆட்சிக்கு ஆதரவு கொடுத்து ஒரே ஆட்சி காலத்தில் வெவ்வேறு கூட்டணியில் 3-வது முறையாக துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்று உள்ளார்.


Next Story