மரியாதை செலுத்த அனுமதி மறுப்பு: சுவர் ஏறிக்குதித்த அகிலேஷ் யாதவ்


மரியாதை செலுத்த அனுமதி மறுப்பு: சுவர் ஏறிக்குதித்த அகிலேஷ் யாதவ்
x
தினத்தந்தி 11 Oct 2023 12:29 PM GMT (Updated: 11 Oct 2023 12:58 PM GMT)

இந்திய விடுதலை போராட்ட வீரர் ஜெயப்பிரகாஷ் நாராயண் சிலைக்கு மரியாதை செலுத்த அனுமதி மறுக்கப்பட்டதால் அகிலேஷ் யாதவ் சுவர் ஏறிக்குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

லக்னோ,

இந்திய விடுதலை போராட்ட வீரர் ஜெயப்பிரகாஷ் நாராயண் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதனிடையே உத்தரபிரதேச தலைநகரான லக்னோவில் உள்ள ஜெயப்பிரகாஷ் நாராயண் சர்வதேச மையத்தின் வாயிலை பாதுகாப்பு காரணமாக உத்தரபிரதேச அரசு மூடியது. சர்வதேச மையத்தில் நுழையவும், அங்குள்ள ஜெயப்பிரகாஷ் நாராயண் சிலைக்கு மாலை அணிவிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் அவருடைய கட்சியினர் தடையை மீறி தடுப்பு சுவர் மீது ஏறிக்குதித்து ஜெயப்பிரகாஷ் நாராயண் சர்வதேச மையத்தில் புகுந்தனர். பின்னர் அங்குள்ள ஜெயப்பிரகாஷ் நாராயண் சிலைக்கு சமாஜ்வாடி கட்சியினர் மரியாதை செலுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

அகிலேஷ் யாதவ் சுவர் ஏறி குதிக்கும் போட்டோ சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


Next Story