இந்திய மொழிகள் அனைத்தும் தேசிய மொழிகள் தான் - மத்திய மந்திாி தர்மேந்திர பிரதான்


இந்திய மொழிகள் அனைத்தும் தேசிய மொழிகள் தான் - மத்திய மந்திாி தர்மேந்திர பிரதான்
x

புதிய கல்விக் கொள்கையில் அனைத்து பிராந்திய மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என மத்திய மந்திாி தர்மேந்திர பிரதான் தொிவித்து உள்ளாா்.

காந்திநகர்,

குஜராத் மாநிலம் காந்திநகரில், கல்வி மந்திரிகளின் 2 நாள் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யுனியன் பிரதேச கல்வி அமைச்சா்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனா்.

இந்த மாநாட்டில், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் நேற்று பேசினார்.

அவா் பேசியதாவது, இந்திய மொழிகள் அனைத்துமே தேசிய மொழிகள் தான். அது குஜராத்தி, தமிழ், பெங்காலி அல்லது மராத்தி என எந்த மொழியாக இருந்தாலும் அது இந்தி மற்றம் ஆங்கில மொழியை விட தாழ்ந்தது அல்ல. ஏனெனில் ஒவ்வொரு மொழியும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் தான் புதிய கல்விக் கொள்கையில் அனைத்து பிராந்திய மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

கல்வி அமைப்பை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததன் பின்னர் காலனித்துவ ஆட்சி உருவானது. அந்த அடிமைத்தன மனப்போக்கு மற்றும் காலனித்துவத்தில் இருந்து வெளியே வருவதற்கான காலம் வந்துவிட்டது. அபோது தான் பள்ளி கல்வி மூலம் அறிவு சார் தலைமைத்துவத்தை இந்தியா பெறுவதற்கான அடித்தளமாக அமையும்.

1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை, ஒவ்வொரு வகுப்பிற்கும் தொலைக்காட்சி சேனல்களை அறிமுகப்படுத்தி, நிகழ்ச்சிகள் உருவாக்கப்படும். அதற்காக பட்ஜெட்டில் சுமாா் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.


Next Story