கடைக்கு சென்று வீடு திரும்பிய சிறுமி கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்
கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்க்கு திரும்பிக்கொண்டிருந்த சிறுமி கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கவுகாத்தி,
அசாம் மாநிலம் கொக்ராஜ்ஹர் மாவட்டத்தில் தொல்மாரா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 16 வயதான சிறுமி நேற்று முன் தினம் இரவு தனது வீட்டிற்கு அருகே உள்ள கடைக்கு சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது, அந்த சிறுமியை பின் தொடர்ந்து வந்த 3 பேர் கொண்ட கும்பல் சிறுமியை கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது.
தான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது குறித்து பாதிக்கபப்ட்ட சிறுமி தனது வீட்டில் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச்சென்ற 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story