வெள்ள பாதிப்பு நீடிப்பு அமர்நாத் யாத்திரை 2-வது நாளாக நிறுத்தம்


வெள்ள பாதிப்பு நீடிப்பு அமர்நாத் யாத்திரை 2-வது நாளாக நிறுத்தம்
x

காஷ்மீரில் அமர்நாத் குகை கோவில் பனிலிங்கத்தை தரிசிப்பதற்கான யாத்திரை நடந்து வருகிறது.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் அமர்நாத் குகை கோவில் பனிலிங்கத்தை தரிசிப்பதற்கான யாத்திரை நடந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை வரை 1 லட்சத்து 13 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதற்கிடையே குகை கோவில் அருகே கடந்த சனிக்கிழமை, மேகவெடிப்பால் பலத்த மழை கொட்டி தீர்த்தது. அதனால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அமர்நாத் பக்தர்கள் போட்டிருந்த கூடாரங்கள் அடித்து செல்லப்பட்டன. பலர் காணாமல் போனார்கள். ஆகவே, நேற்று முன்தினம் அமர்நாத் யாத்திரை நிறுத்திவைக்கப்பட்டது. போலீஸ், ராணுவம், சி.ஆர்.பி.எப்., தேசிய பேரிடர் மீட்புப்படை ஆகியவை கூட்டாக மீட்புப்பணியில் ஈடுபட்டன. மீட்புப்பணி இன்னும் முடியாததால், நேற்று 2-வது நாளாக யாத்திரை நிறுத்தப்பட்டது.

1 More update

Next Story