தொழிலில் நஷ்டம்: குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி - வியாபாரி பலி


தொழிலில் நஷ்டம்: குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி - வியாபாரி பலி
x

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த நிலையில் இதில் ஒருவர் உயிரிழந்தார்.

சண்டிகர்,

அரியானா மாநிலம் அம்பாலா நகரம் நயா பான்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்விண்டர். இவரது மனைவி குஷம் (வயது 58). இந்த தம்பதிக்கு ஹிதீஷ் (34 வயது) என்ற மகன் உள்ளார். ஜாஸ்விண்டர் வசித்து வரும் பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார்.

கொரோனாவுக்கு பின் தொழிலில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஜாஸ்விண்டர் குடும்பத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வியாபாரி ஜாஸ்விண்டர் தனது மனைவி மற்று மகனுடன் நேற்று விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 3- பேரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ஜாஸ்விண்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குஷம் மற்றும் மகன் ஹிதீஷ் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story