இஸ்ரோ தலைவருடன் லக்சம்பர்க் நாட்டு தூதர் சந்திப்பு- விண்வெளி திட்டங்கள் குறித்து ஆலோசனை


இஸ்ரோ தலைவருடன் லக்சம்பர்க் நாட்டு தூதர் சந்திப்பு-  விண்வெளி திட்டங்கள் குறித்து ஆலோசனை
x

இஸ்ரோ தலைவருடன் லக்சம்பர்க் நாட்டு தூதர் சந்தித்து விண்வெளி திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

பெங்களூரு: இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தலைவர் சோம்நாத்தை பெங்களூருவில் லக்சம்பர்க் நாட்டின் தூதர் பெக்கி பிரான்சின் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, இருநாடுகளும் விண்வெளித்துறை திட்டங்களில் இணைந்து செயல்படுவது பற்றி அவர்கள் விவாதித்தனர். பின்னர் அந்த தூதர், யு.ஆர்.ராவ் செயற்கைகோள் மையம் மற்றும் செயற்கைகோள் வடிவமைப்பு மையங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். விண்வெளித்துறையில் தனியாரை அனுமதித்துள்ளது குறித்தும் அவரிடம் சோம்நாத் எடுத்து கூறினார்.

இந்த சந்திப்பின்போது, யு.ஆர்.ராவ் செயற்கைகோள் மைய இயக்குனர் சங்கரன், விண்வெளித்துறை கூடுதல் செயலாளர் சந்தியா வேணுகோபால் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story