கூட்டுறவு வங்கிகளுக்கான தேசிய மாநாடு இன்று தொடக்கம்


கூட்டுறவு வங்கிகளுக்கான தேசிய மாநாடு இன்று தொடக்கம்
x

Image Courtesy:PTI

டெல்லியில் கிராமப்புற கூட்டுறவு வங்கிகளுக்கான ஒரு நாள் தேசிய மாநாடு இன்று நடைபெற உள்ளது

புதுடெல்லி,

கூட்டுறவு அமைச்சகம் மற்றும் மாநில கூட்டுறவு வங்கிகளின் தேசிய கூட்டமைப்பு சார்பில் கிராமப்புற கூட்டுறவு வங்கிகளின் ஒரு நாள் தேசிய மாநாடு இன்று டெல்லியில் நடைபெற உள்ளது.

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை மந்திரி அமித்ஷா இந்த மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டின் நிறைவில் மத்திய கூட்டுறவுத்துறை இணை மந்திரி பி.எல்.வர்மா உரையாற்றுகிறார்.

இந்த மாநாட்டில் , மாநில கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு செயல்திறன் விருதுகள் வழங்கப்படும். மேலும், 100 வருட சேவைக்காக குறுகிய கால கூட்டுறவு கடன் சங்கங்களை மத்திய மந்திரி அமித்ஷா பாராட்ட உள்ளார்.

1 More update

Next Story