டெல்லியில் தேசிய பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் இன்று திறப்பு; உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்கிறார்!
பழங்குடியினர் ஆராய்ச்சி, திறன் மேம்பாட்டு ஆகிய திட்டங்களை தேசிய பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் கண்காணிக்கும்.
புதுடெல்லி,
பழங்குடியினர் நல அமைச்சகத்தின் சார்பில் தேசிய பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை மந்திரி அமித்ஷா இன்று தலைநகர் டெல்லியில் தொடங்கி வைக்கிறார்.
இது குறித்து பழங்குடியினர் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பழங்குடியினர் ஆராய்ச்சி மையங்கள், திறன் மேம்பாட்டு மையங்கள் ஆகிய திட்டங்களை தேசிய பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் கண்காணிக்கும். ஆராய்ச்சி மற்றும் பயிற்சியின் தரத்தை மேம்படுத்துவதற்காக நெறிமுறைகளையும் வகுக்கும்.
பழங்குடியினர் நலன் அமைச்கத்தின் சாதனைகள் குறித்த கண்காட்சி நடைபெற உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின சமுதாயத்தினர் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை காட்சிப்படுத்த உள்ளனர். பழங்குடியினரின் நடனமும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமுக வலை தளங்களில் ஒலிபரப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.