ராகுல் காந்தி பிரதமரானால் நாடு ஊழல் நாடாக மாறும் -அமித் ஷா
ராகுல் காந்தி பிரதமரானால் நாடு ஊழல் நாடாக மாறும் என உள்துறை மந்திரி அமித் ஷா கூறினார்
ஜெய்ப்பூர்
ராகுல் காந்தி பிரதமரானால், இந்தியா ஊழல் நாடாக மாறும் என்றும், நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றால், மோசடிக்காரர்கள் சிறை கம்பிக்குப் பின்னால் செல்வார்கள் என்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.
ராஜஸ்தானில் நடைபெற்ற கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா பேசும் போது கூறியதாவது:
அசோக் கெலாட் அரசு ஊழலில் முதலிடத்தில் உள்ளது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்.
வருகின்ற தேர்தலில் ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும், 2024 மக்களவைத் தேர்தலில் 300 இடங்களைப் பெற்று மோடி மீண்டும் பிரதமராவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
சோனியா காந்தியின் குறிக்கோள் ராகுல் காந்தியை பிரதமராக்குவது .லாலு யாதவின் இலக்கு அவரது மகன் தேஜஸ்வி யாதவை பிரதமராக்குவது. மம்தா பானர்ஜியின் நோக்கம் தனது மருமகன் அபிஷேக்கை முதல்வராக்குவது என்றும், அதேபோல் அசோக் கெலாட் தனது மகன் வைபவை முதல்வராக்க நினைக்கிறார் என்றும் கூறினார்.