பஞ்சாப் மாநில போலீசாரை கண்டித்து வீடியோ வெளியிட்ட அம்ரித்பால் சிங் - சமூக வலைத்தளங்களில் வைரல்


பஞ்சாப் மாநில போலீசாரை கண்டித்து வீடியோ வெளியிட்ட அம்ரித்பால் சிங் - சமூக வலைத்தளங்களில் வைரல்
x

அம்ரித்பால் சிங்கின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சண்டிகார்,

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பிரிவினைவாத தலைவரான அம்ரித்பால் சிங் போலீசாரின் கைது நடவடிக்கைளுக்கு பயந்து தலைமறைவாக உள்ளார். அவர் நேபாளத்தில் பதுங்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்த நிலையில் தனது ஆதரவாளர்களை கைது செய்துள்ள பஞ்சாப் போலீசாரை கண்டித்து வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டு உள்ளார். அதில் மாநில அரசுக்கு தன்னை கைது செய்யும் நோக்கம் இருந்தால், போலீசார் தனது வீட்டுக்கு வரட்டும் என கூறியுள்ளார்.

அந்த வீடியோ பதிவில் அவர் மேலும் கூறுகையில், 'என்னை கைது செய்வதற்கு அனுப்பி வைக்கப்பட்ட லட்சக்கணக்கான போலீசாரிடம் இருந்து கடவுள்தான் எங்களை காப்பாற்றினார்' என தெரிவித்து உள்ளார். அம்ரித்பால் சிங்கின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது பஞ்சாப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story