மும்மொழி கொள்கையை முடிவுக்கு கொண்டுவர முயற்சி; மத்திய அரசு மீது குமாரசாமி குற்றச்சாட்டு


மும்மொழி கொள்கையை முடிவுக்கு கொண்டுவர முயற்சி; மத்திய அரசு மீது குமாரசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 7 Oct 2022 6:45 PM GMT (Updated: 7 Oct 2022 6:45 PM GMT)

மும்மொழி கொள்கையை முடிவுக்கு கொண்டுவர முயற்சி நடப்பதாக மத்திய அரசு மீது குமாரசாமி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

பெங்களூரு:

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் தேர்வுகளை இந்தி-ஆங்கிலத்தில் மட்டும் நடத்துவதாக அறிவித்துள்ளது. கன்னடம் உள்பட மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் இந்தி மொழி திணிப்பு, மொழி ஏற்றத்தாழ்வுக்கு இதைவிட வேறு உதாரணம் தேவையா?.

மத்திய அரசுக்கு மாநில மொழிகளை ஒழிக்க வேண்டும் என்ற பிடிவாதம் இருப்பது போல் தெரிகிறது. கன்னடம் உள்பட தென்இந்திய மொழிகள் மீது சகிப்பின்மை, விரோதத்தை மத்திய அரசு வெளிப்படுத்துகிறது. மும்மொழி கொள்கையை முடிவுக்கு கொண்டுவர முயற்சி நடக்கிறது. கூட்டாட்சி தத்துவத்தில் ஆட்சி செய்யும் கட்சிக்கு மாநில மொழிகள் தேவை இல்லை என்பதை இது காட்டுகிறது.

மத்திய பணியாளர் ஆணைய தேர்வை கன்னட மொழியில் நடத்த வேண்டும். கர்நாடகத்தில் உள்ள மத்திய அரசின் பணிகளுக்கு கன்னடர்களை மட்டுமே பணி நியமனம் செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை ஏற்க மறுத்தால் பா.ஜனதா கன்னடர்களின் எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும்.

இவ்வாறு குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.


Next Story