பிணவறையில் பெண் உடல்களை நிர்வாணமாக படம் எடுத்த ஊழியர்


பிணவறையில் பெண் உடல்களை நிர்வாணமாக படம் எடுத்த ஊழியர்
x

நர்சுகளுடன் உல்லாசமாக இருந்ததுடன் பிணவறையில் பெண் உடல்களை நிர்வாணமாக படம் எடுத்த ஊழியரை போலீசார் தேடி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட அவரது செல்போனில் இந்த பகீர் தகவல்கள் அம்பலமாகி உள்ளது.

குடகு:-

பிணவறை ஊழியர் கைது

குடகு மாவட்டம் மடிகேரி அருகே கடகதாலு கிராமத்தை சேர்ந்தவர் சையத் (வயது 30). இவர் கடந்த ஆண்டு (2021) கொேரானா காலக்கட்டத்தில் மடிகேரி அரசு ஆஸ்பத்திரியில் பிணவறை ஊழியராக ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு பார்த்தார். கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதாக சையத் விருதும் பெற்றுள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம், சையத் மடிகேரியில் உள்ள ஒரு ெபண்ணின் வீட்டுக்குள் நுழைய முயன்றுள்ளார். இதனை பார்த்த அந்தப்பகுதி மக்கள் அவரை பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் செல்போனை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட சையத்தின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளது.

நர்சுகளுடன் உல்லாசம்

அதாவது சையத், இளம்பெண்களுடன் ஆபாசமாக பேசியது, நர்சுகள், ஆஸ்பத்திரி பெண் ஊழியர்களுடன் பிணவறையில் உல்லாசமாக இருந்தது, பிணவறைக்கு வரும் பெண் உடல்களை நிர்வாணமாக படம் மற்றும் வீடியோ ஆகியவை இருந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மடிகேரி அரசு ஆஸ்பத்திரியில் சையத் அனைவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். மேலும் நர்சுகள், பெண் ஊழியர்களிடம் நெருங்கி பழகி வந்துள்ளார்.

அவர்களுடன் செல்போனில் ஆபாசமாகவும் பேசி வந்துள்ளார். மேலும் தனது வலையில் விழுந்த நர்சுகள் மற்றும் பெண் ஊழியர்களை பிணவறைக்கு அழைத்து சென்று சையத் உல்லாசம் அனுபவித்துள்ளார். அதனை தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.

நிர்வாண படம்

மேலும் விபத்து மற்றும் தற்கொலை வழக்கில் பிணவறைக்கு வரும் பெண் உடல்களை பிரேத பரிசோதனைக்கு முன்பு சையத், நிர்வாணமாக படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார். இதுபற்றி அரசு ஆஸ்பத்திரி டீன் கரியப்பாவுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து அவர் மடிகேரி போலீசில் சையத் மீது புகார் அளித்துள்ளார். இதற்கிடையே சையத் தலைமறைவாகி விட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும், பிணவறை ஊழியர்கள் மற்றும் சையத்துடன் பேசி பழகி வந்த நர்சுகள், பெண் ஊழியர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

போலீஸ் வலைவீச்சு

மேலும், விபத்தில் சிக்கி உயிரிழக்கும் பெண்கள், தற்கொலை செய்து செய்துகொள்ளும் பெண்கள் மற்றும் பிற வழக்கில் உயிரிழக்கும் பெண்களின் உடல்கள் மடிகேரி அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டிருக்கும்.

பிரேத பரிசோதனைக்கு பிறகு அந்த உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். அவ்வாறு பிணவறைக்கு வரும் பெண்களின் உடல்களை சையத் தனது செல்போனில் நிர்வாணமாக படம் மற்றும் வீடியோவும் எடுத்து வந்துள்ளார்.


Next Story