பிரதமர் தொடங்கிய ரயில் வந்த தண்டவாளத்தில் வெடி விபத்து... பயங்கரவாதிகளின் சதியா?


பிரதமர் தொடங்கிய ரயில் வந்த தண்டவாளத்தில் வெடி விபத்து... பயங்கரவாதிகளின் சதியா?
x

இந்த சதி திட்டத்திற்கு பின்னால் பயங்கரவாதிகள் உள்ளனரா? என்ற கோணத்தில் விசாரணை தீவிரமாக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத்,

கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி குஜராத்தின் அகமதாபாத் நகரையும் ராஜஸ்தானின் உதய்ப்பூர் நகரையும் இணைக்கும் வகையில் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்திருந்தார்.

இந்நிலையில், இந்த ரயில் உதய்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது, உதய்பூரில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உதய்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் துங்கர்பூரிலேயே நிறுத்தப்பட்டது.

குண்டு வெடிப்பால் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, என்.ஐ.ஏ மற்றும் ஆர்பிஎப் புலனாய்வு அமைப்புகள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், ரயில்வே பாதையில் இருந்து சக்தி வாய்ந்த வெடிப்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சதி திட்டத்திற்கு பின்னால் தீவிரவாதிகள் உள்ளனரா? என்ற கோணத்தில் விசாரணை தீவிரமாக்கப்பட்டுள்ளது.

உதய்பூரில் வருகின்ற டிசம்பர் 5 ஆம் தேதி ஜி20 மாநாடு தொடர்பான உலக நாட்டு தலைவர்களின் பிரதிநிதிகள் பங்குபெறும் கூட்டம் நடைபெற இருந்த நிலையில், இந்த சதி திட்டம் அரங்கேறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story