உத்தரபிரதேசத்தில் பழமையான கட்டிடம் இடிந்து 5 பக்தர்கள் உயிரிழப்பு..!


உத்தரபிரதேசத்தில் பழமையான கட்டிடம் இடிந்து 5 பக்தர்கள் உயிரிழப்பு..!
x
தினத்தந்தி 16 Aug 2023 6:56 AM IST (Updated: 16 Aug 2023 1:46 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் பழமையான கட்டிடம் இடிந்து 5 பக்தர்கள் உயிரிழந்தனர்.

மதுரா,

உத்தரபிரதேசத்தின் பிருந்தாவன் நகரில் பாங்கே பிஹாரி என்ற கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் மிகவும் பழமையான கட்டிடம் ஒன்று உள்ளது.

நேற்று காலை இந்த கட்டிடத்தின் பால்கனியில் குரங்குகள் கூட்டமாக நின்று, தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டன. இதில் பால்கனி இடிந்து, அந்த வழியாக கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது விழுந்தது.

இதில் பல பக்தர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இதை தொடர்ந்து அங்கு உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. எனினும் இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story