வரதட்சணை கொடுமையால் மருத்துவ மாணவி தற்கொலை..!
திருமணமான 3 மாதத்தில் வரதட்சணை கொடுமையால் மருத்துவ மாணவி தற்கொலை செய்துள்ளார்.
நெல்லூர்,
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் உள்ள வஜ்ர கொத்தூரை சேர்ந்தவர் ஜோதி குமாரி. இவரது மகள் சைதன்யா. இவருக்கு வயது 23. இவர் நெல்லூரில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் டாக்டருக்கு படித்து வந்தார். இவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, விஜயநகரம் மாவட்டத்தில் பிஜி படித்து வரும் ஒரு டாக்டருடன் திருமணம் நடத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில் திருமணத்தின் போது வரதட்சணையாக வாங்கியதை விட அதிக அளவில் நகை பணம் கேட்டு சைதன்யாவை கணவர் துன்புறுத்தியுள்ளார். இதனால் சைதன்யாவின் தாய் ஜோதிகுமாரி அவர் கேட்ட நகை பணத்தை கொடுத்துள்ளார்.
இருப்பினும் கார் வாங்கி தரவேண்டும் என்று மேலும் அடித்து துன்புறுத்தியுள்ளார். அதனால் ஆடி மாதம் முடிந்தவுடன் கார் வாங்கி தருவதாக சைதன்யாவின் தாயார் அவரிடம் கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சைதன்யாவுக்கு போன் செய்த அவரது கணவர் போனில் ஆபாசமாக திட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த சைதன்யா தனது தாய்க்கு போன் பன்ணி கணவரின் தொல்லையை என்னால் தாங்கமுடியவில்லை அதனால் நான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி போனை சுவிட்ச்-ஆப் செய்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த அவரது தாயார் மகளின் தோழிக்கு போன் பண்ணி தகவலை கூறியுள்ளார். அங்கு சென்ற தோழிகள் கதவை வெகு நேரமாக தட்டியுள்ளார். ஆனால் சைதன்யா கதவை திறக்கவில்லை. இதையடுத்து அவர்கள் விடுதி காப்பாளர் மற்றும் மற்ற ஊழியர்களுக்கு தகவலை தெரிவித்தனர்.
அவர்கள் கதவை உடைத்து பார்தத போது சைதன்யா மின் விசிறியில் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சணையே இந்த சம்பவத்திற்க்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்தனர். இருப்பினும் சரியாண காரணம் இன்னும் தெரியாததால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.