ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி


ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி
x

கால் வீக்கம் காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சென்னை,

ஜெகன்மோகன் ரெட்டியின் ஒஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தீவிர அரசியல் ஈடுபட்டு வந்த ரோஜா, ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். இதையடுத்து தற்போது ஆந்திரா மாநில சுற்றுலாத் துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், அவர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கால் வீக்கம் காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


Next Story